/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/43_31.jpg)
கரோனா நோய்த்தொற்று காரணமாக, பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சுமார் ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (7.2.2022) காலை 08.12 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இவரின்மறைவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறுதி சடங்கில்குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதலவர்உத்தேவ் தாக்ரே, மத்திய அமைச்சர்கள், திரைபிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.அந்தவகையில்பாலிவுட் நடிகர் ஷாருக்கானும்அவரது செயலர் பூஜா தத்லானியும்கலந்து கொண்டு லதா மங்கேஸ்கரின்உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் ஷாருக்கான் மற்றும் பூஜா தத்லானி இருவரும் மறைந்த லதா மங்கேஸ்கருக்குஅஞ்சலி செலுத்தும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் ஷாருக்கான் தனது இரு கைகளையும் விரித்து துவா வாசிப்பது போலவும், பூஜா தத்லானி இரு கைகளை கூப்பி வணங்குவது போலவும் அமைந்துள்ளது. மதம் கடந்து மனிதம் போற்றும் இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து "இதுதான் எங்கள் இந்தியா" எனக் குறிப்பிட்டு வைரல் செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)